தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி பல்வேறு முக்கிய கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. சமீபத்தில் விஜய் சேதுபதி அட்லீயின் ஜவான் திரைப்படத்தில் நடிக்கிறார். புஷ்பா 2 உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் நடிக்கவில்லை என தகவல் பரவின. இந்நிலையில் சமீபத்தில் விஜய் சேதுபதி காத்து வாக்குல் ரெண்டு காதல் திரைப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அதில் அனிருத் விஜய் சேதுபதியிடம் ஜவான் திரைப்படத்தில் நடிக்கிறீர்களா என கேட்டுள்ளார். அதற்கு விஜய் சேதுபதி அப்படத்தில் நடிப்பதாக சொல்லி உறுதி செய்திருக்கிறார்.