• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயரை அறிவித்த விஜய்சேதுபதி

Byதன பாலன்

Feb 11, 2023

2010-ஆம் ஆண்டு வெளியான ‘பானா காத்தாடி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அதர்வா. தொடர்ந்து இவர் நடித்த ‘பரதேசி’, ‘இமைக்கா நொடிகள்’ போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளியான ‘டிரிக்கர்’ ‘பட்டத்து அரசன்’ போன்ற படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது.இவர் தற்போது அறிமுக இயக்குனர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக தமிழில் பிரம்மன், மாயவன் படங்களில் நடித்த லாவண்யா திரிபாதி நடிக்கிறார் அன்னை பிலிம் புரொடக்க்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார் படத்திற்கான பெயரையும், போஸ்டரையும் நடிகர் விஜய்சேதுபதி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்