1000 கோடி பட்ஜெட் படத்தில் நடிக்கும் வாய்ப்பை நடிகர் விஜய் தவறவிட்டுள்ளார் என்பது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
விஜய் வாரிசு படத்துடன் இதுவரை 66 படங்கள் நடித்துவிட்டார். இதில் பல வெற்றி, தோல்வி படங்கள் உள்ளன. வாரிசு திரைப்படத்தின் வியாபாரம் 280 கோடி ரூபாய் வரை நடைபெறும் என கூறப்படுகிறது. தொலைக்காட்சி, டிஜிட்டல், வெளிநாட்டு உரிமைகள் பெரும் தொகைக்கு விற்பனையாகியுள்ளன
அதேபோல் விஜய் அவரது திரைப்பயணத்தில் நிறைய ஹிட் படங்களிலும் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்திருக்கிறார்.அப்படிதான் இப்போது ஒரு தகவல் வந்துள்ளது அதாவது விஜய் ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்துள்ளாராம்.இயக்குனர் ஷங்கர் வேள்பாரி என்ற கதையை திரைப்படமாக எடுக்க இருப்பது நாம் அனைவருக்குமே தெரியும், இதற்கான வேலைகளில் அவர் பிஸியாக இருக்கிறார். சூர்யா, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் என பலரது பெயர் இப்படத்திற்காக அடிபடுகிறது.
ஆனால் இந்த படத்தில் முதலில் நடிக்கும் வாய்ப்பு விஜய்யிடம் தான் சென்றுள்ளதாம். அவர் அந்த நேரத்தில் படத்தில் நடிக்கும் வாய்ப்பை வேண்டாம் என கூறியிருக்கிறார்.இப்போது தளபதி ரசிகர்கள் ஆவலாக வாரிசு திரைப்படத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் படத்தின் வியாபாரம் குறித்து வரும் தகவல்களால் ரசிகர்கள் கொஞ்சம் சோகத்தில் உள்ளார்கள்.