• Sun. Aug 2nd, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

சாதனைகளை படைத்து வரும் லவ் டுடே

ByA.Tamilselvan

Nov 17, 2022

பல முண்ணி நடிகளின் படங்களின் வசூலுக்கு இணையாக சாதனை படைத்து வருகிறது லவ்டூடே திரைப்படம்
கோமாளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்.
இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இவர் இயக்கிய இரண்டாவது படம் தான் லவ் டுடே. இப்படத்தை இயக்கியது மட்டுமல்லாமல் இதில் ஹீரோவாகவும் அவரே நடித்திருந்தார்.கதாநாயகியாக இவானா மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
காதல் கதைக்களத்தில் இளைஞர்களை கவரும் வண்ணம் அமைத்திருந்த இப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளது.தொடர்ந்து ஒவ்வொரு நாளும் வசூலில் புதுப்புது சாதனைகளை படைத்து வரும் லவ் டுடே திரைப்படம் இதுவரை ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்து பிரமாண்ட சாதனையை படைத்துள்ளது.பல முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் கூட செய்யமுடியாத வசூல் சாதனையை பிரதீப்பின் அறிமுக திரைப்படம் செய்துள்ளது என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.