• Tue. Dec 10th, 2024

இனி விஜய் டிவி பக்கமே வரபோவதில்லை… தொகுப்பாளினி பாவனா பளிச்…

Byகாயத்ரி

May 14, 2022

விஜய் தொலைக்காட்சி என்று எடுத்துக் கொண்டால் ஏகப்பட்ட தொகுப்பாளர்கள் உள்ளார்கள். எல்லோருமே மக்களுக்கு பிடித்த பிரபலங்களாக இருந்து வருகிறார்கள்…

இப்போது பிரியங்கா, மாகாபா ஆனந்த், ரக்ஷன் போன்றவர்கள் எல்லாம் தற்போதைய பிரபல தொகுப்பாளர்களாக உள்ளார்கள். அப்படி விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக இருந்து தொகுப்பாளர்களில் பாவனாவும் ஒருவர். இவரும், சிவகார்த்திகேயனும் இணைந்து தொகுத்து வழங்கிய ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சி படு சூப்பர் டூப்பர் ஹிட் தான். அதில் சிவகார்ததிகேயனை பாவனாவை கலாய்ப்பதும், ரம்யா கிருஷ்ணன் சிவகார்த்திகேயனை ஓட்டுவதும் மிகவும் கலகலப்பாக இருக்கும். விஜய் தொலைக்காட்சியை தாண்டி இடையில் விளையாட்டு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த பாவனா இப்போது கலர்ஸ் தமிழில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அவரிடம் ஒரு ரசிகர் விஜய் டிவி எப்போது வருவீர்கள் என கேட்க அதற்கு அவர், இனி விஜய் டிவி பக்கம் வரப்போவதில்லை, அவர்களின் ஸ்டைல் இப்போது மாறியுள்ளது. காமெடியாகவே நிகழ்ச்சியை கொண்டு செல்ல அவர்கள் இப்போது வழக்கமாக வைத்துள்ளார்கள். அது என் ஸ்டைலுக்கு மாறாக உள்ளது என நச்சுன்னு கூறியுள்ளார்.