ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள இந்தோனேசியா சென்றுள்ள மோடி அங்குள்ள சதுப்பு நிலக்காடுகளை பார்வையிட்டார்.
உலக தலைவர்கள் பங்கேற்கும் ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இந்தோனேசிய தலைநகர் பாலி சென்றுள்ளார். பயணத்தின் இரண்டாவது நாளான இன்று அவர் பாலியில் உள்ள டமான்ஹூதான்ரயா சதுப்பு நிலக்காடுகளை பார்வையிட்டார். பின்னர் அங்கு உலக நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டார்.இந்த நிகழ்வில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.