

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் தடபுடலாக கடந்த ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது. இந்த திருமணத்தில் ரஜினிகாந்த், ஷாருக்கான், அட்லீ, ஷாலினி அஜித், சூர்யா, ஜோதிகா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்றனர். மிகவும் ப்ரைவசியாக நடந் இந்த பிரமாண்டமாக திருமணத்தை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ஃபிலிக்ஸ் வாங்கியிருந்தது. இதன் ரிலீஸுக்கு பல ரசிகர்கள் காத்திருந்தனர். இந்த திருமணத்தை ‘Nayanthara Beyond the Fairy tale’ எனும் தலைப்பில் நெட்ஃபிலிக்ஸ் ஒளிபரப்ப திட்டமிட்டது. இந்நிலையில், இந்த திருமண வீடியோவின் டீசரை தற்போது நெட்பிலிக்ஸ் தனது தளத்தில் வெளியிட்டுள்ளது.இதை பார்த்த விக்கி-நயன் ரசிகர்கள் நிஜமாகவே fairytale போலவே இருக்கிறது என்று கூறிவருகின்றனர்.
