• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

துணைகுடியரசுத்தலைவர் சென்னை வருகை

Byவிஷா

Jan 31, 2025

முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கையாநாயுடுவின் இல்லத் திருமண விழாவிற்கு, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப்தன்கர், மத்திய அமைச்ர் அமித்ஷா சென்னை வருகை தருவதால் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..,
துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் 31.01.2025 அன்று சென்னை வருவதைக் கருத்தில் கொண்டு, வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளின் போக்குவரத்து இயக்கத்தினை சுமூகமாகவும், தாமதத்தை குறைப்பதை உறுதி செய்வதற்காகவும் மதியம் 14.00 மணி முதல் இரவு 22.00 மணிவரை பின்வரும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
சென்னை விமான நிலையத்திலிருந்து கிழக்குக் கடற்கரைச் சாலைக்கு (நுஊசு) செல்லும் வாகன ஓட்டிகள், பழைய மகாபலிபுரம் சாலையை மாற்றுப் பாதையாகப் பயன்படுத்தி தங்கள் இலக்கை அடையலாம். குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து வணிக வாகனங்களும் விமான நிலையம் முதல் நுஊசு வரை உள்ள சாலையைப் பயன்படுத்த தடை விதிக்கப்படும்.பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.