• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் அருகே வேட்டார்குளம் ஆதி மாசாணி அம்மன் கோவில் திருவிழா

ByKalamegam Viswanathan

Feb 17, 2024

குருவித்துறை வேட்டார்குளம் ஆதிமாசாணி அம்மன் கோவில் 5 நாட்கள் திருவிழா. நடைபெற்றது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறை வேட்டார்குளம் அருகில் அமைந்துள்ள ஆதிமாசாணி அம்மன் கோவில் திருவிழா வருடந்தோறும் சிறப்பாக நடைபெறும். திருவிழாவை முன்னிட்டு முதல்வாரம் பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர். வியாழக்கிழமை இரவு மயானபூஜை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை அதிகாலை தலைமைநிர்வாகி மாசாணிசின்னமாயன், நிர்வாகிகள் கலாராணி, சிவராஜா, மாசாணிராஜா, கங்கேஸ்வரி,சவுந்தரபாண்டி உள்பட பக்தர்கள் மேளதாளத்துடன் வைகை ஆற்றுக்கு சென்று சக்திகரகம் அலங்காரம் செய்து பூஜைகள் நடந்தது. அங்கிருந்து தலைமை நிர்வாகி மாசாணிசின்னமாயன் சக்திகரகம் எடுத்து வந்தார். வழிநெடுக பெண்கள் சக்திகிரகத்திற்கு அபிஷேகம் செய்தனர். இதை தொடர்ந்து கோவிலுக்கு வந்து பூஜையில் நடந்து. அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று காலை பக்தர்கள் பூக்குழி இறங்கினார்கள். இந்நிகழ்ச்சிகளில் மன்னாடிமங்கலம் ராஜபாண்டி, நவநீதகிருஷ்ணன் ஆகியோர் பிரசாதம் வழங்கினர். திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர், நாளைகோவிலில் இருந்து மகளிர் அணி முருகேஸ்வரி உட்பட பெண்கள் முளைப்பாரி சக்திகரகம் ஊர்வலமாகச்சென்று வைகைஆற்றில் கரைக்கும் விழா நடைபெறும்.நாளை மறுநாள் காலை சக்தி அலங்காரம் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு மகா முனீஸ்வரர்,கருப்புசாமி பூஜை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்து வருகின்றனர். காடுபட்டி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்து வருகின்றனர்.