

கரூரில் நடிகர் விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில் திண்ணப்பா மற்றும் கலையரங்கம் ஆகிய 2 திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் இன்று திண்ணப்பா திரையரங்கத்திற்கு மாலை 6 மணிக்கு மேல் நடிகர் விக்ரம், நடிகை மற்றும் திரைப்பட நடிகர்கள் என பலர் கலந்து கொண்டு திரைப்படத்தை காண உள்ள நிலையில் ரசிகர்கள் அதிக கூட்டம் நிலவியதால் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஒரு சில வாகனங்கள் அனுமதி இன்றி திரையரங்குக்குள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அவைகளை பறிமுதல் செய்த போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு இருசக்கர வாகனங்கள் கரூர் போக்குவரத்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர் நடிகர்கள் வர இன்னும் அரை மணி நேரம் தாமதமாகும் எனவே கூட்டம் சேர்க்காமல் கலைந்து செல்ல வேண்டுமென அறிவுறுத்தி வருகின்றனர்.
நேற்று திண்டுக்கல் பகுதியில் உள்ள திரையரங்கில் திரைப்படத்தை காணச் சென்ற விக்ரம், கதாநாயகி மற்றும் திரைப்படத்தில் நடித்த பலர் படத்தைக் பார்ப்பதற்காக சென்ற நிலையில் ரசிகர்களின் அதிகளவு கூட்டத்தால் நடிகர் விக்ரம் பாதியிலேயே கிளம்பிச் சென்ற சம்பவம் அரங்கேறிய உள்ள நிலையில் தற்போது கரூரில் திரைப்படத்தை காண வருவதற்கு முன்பாகவே ரசிகர்களின் கூட்டத்தால் போலீசார் அவர்களின் வாகனத்தை பறிமுதல் செய்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

