• Sat. Apr 26th, 2025

வசந்த் & கோ 4 நாள் வீட்டு உபயோக பொருட்களின் கண்காட்சி விற்பனை

ByPrabhu Sekar

Mar 14, 2025

நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வசந்த் & கோ 4 நாள் வீட்டு உபயோக பொருட்களின் கண்காட்சி விற்பனை விஜய் வசந்த் எம்.பி தொடங்கி வைத்தார்.

சென்னையை அடுத்த நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வசந்த & கோ சார்பில் வீட்டு உபயோகப் பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை 14,15,16 மற்றும் 17 ஆகிய 4 நாள் நடக்கிறது. இந்த கண்காட்சியை கன்னியாகுமாரி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். 50க்கும் மேற்பட்ட முண்ணனி நிறுவனங்களின் வீட்டு உபயோக பொருட்கள் வைக்கப்பட்டு உள்ளன. வீட்டு உபயோகப் குறிப்பிட்ட பொருட்களில் 50 சதவீதம் வரை தள்ளுபடி செய்யப்படுகிறது.

இந்த கண்காட்சியில் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் நிச்சய பரிசு வழங்கப்படுகிறது. மேலும் முன் பணம் இல்லாமல் மாத தவணையில் கடனுதவி செய்யும் நிறுவனங்களும் உள்ளன. ரூ. 5 ஆயிரத்திற்கு மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு ஸ்லோகன் போட்டி முலம் தினமும் 1 சவரன் தங்கம் பம்பர் பரிசாக வழங்கப்படுகிறது.