• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

பொங்கலுக்கு முன்கூட்டியே வெளியாகும் வாரிசு

ByA.Tamilselvan

Dec 1, 2022

வாரிசு படம் பொங்கல் விருந்தாக வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
வாரிசு பொங்கல் விருந்தாக உலகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வரும் 2023ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி அதாவது தைப்பொங்கலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக படம் வெளியாவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இப்படத்தின் முதல் சிங்கிளாக ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே…’ பாடல் ஏற்கெனவே வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் ஹிட் அடித்துள்ளது .வரும் டிசம்பர் 4ஆம் தேதி,விஜய்க்காக சிம்பு பாடியுள்ள இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகின. மேலும் இப்பாடலில் நடிகர் சிம்பு – தமன், பாடி இசையமைக்கும் காட்சிகள் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
‘வாரிசு’. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இப்படம் வெளியாவதில் ஏற்பட்ட சில சர்ச்சைகள் முடிவுக்கு வந்தது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதனைத் தொடந்து வாரிசு திரைப்படம் குறித்த மேலும் ஒரு புதிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி சந்தோஷத்தை இரட்டிப்பாக்கியுள்ளது.வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவை டிசம்பர் 24ஆம் தேதி சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.
அஜித் நடித்துள்ள ‘துணிவு’ திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த இரண்டு படங்களும் பொங்கலுக்கு மோத உள்ளதை எதிர்பார்த்து கோலிவுட் ரசிகர்கள் உற்சாகத்தில் காத்துள்ளனர்.