• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சபரிமலையிலும் வாரிசு-துணிவு போட்டா போட்டி

ByA.Tamilselvan

Dec 1, 2022

விஜயின் வாரிசு – அஜின் துணிவு படங்கள் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் படம் வெற்றி பெற வேண்டி இருதரப்பு ரசிகர்களுகம் சபரிமலையில் பிரார்த்தனை செய்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் முன்னணி நடிகர்களாக வளம் வந்து கொண்டிருப்பவர்கள் நடிகர் விஜய் மற்றும் அஜித். இவர்கள் இருவரது படங்களும் ஒரே சமயத்தில் வெளியாகும் பட்சத்தில் அவர்களின் ரசிகர்களுக்கு விருந்து தான். அவ்வகையில் பல வருடங்களுக்குப் பிறகு வருகின்ற பொங்கலுக்கு விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் வெளியாக உள்ளன. இவர்களின் படம் வெளியாகும் போது ரசிகர்கள் அந்த படம் வெற்றி பெற வித்தியாசமாக விளம்பரம் செய்வது வாடிக்கையாகிவிட்டது.
இந்நிலையில் கடந்த வாரம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியாக உள்ள துணிவு திரைப்படம் வெற்றி பெற வேண்டி ரசிகர்கள் துணிவு பட போஸ்டர் உடன் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரார்த்தனை செய்தனர். அதனைப் போலவே தற்போது விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வெற்றி பெற வேண்டி பண்ருட்டியை சேர்ந்த விஜய் ரசிகர்கள் வாரிசு பட போஸ்டருடன் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் ப வைரலாகி வருகிறது.