பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை வனிதா விஜயகுமார் பங்கேற்ற பிறகு சின்னத்திரை இருந்து வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. அதனை தொடர்ந்து சினிமாவிலும் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் வனிதா விஜயகுமார் தற்போது பவர் ஸ்டார் சீனிவாசன் ஜோடியாக பிக்கப் படத்த்தி நடித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே பல சர்ச்சைகள் வனிதாவை சுற்றி அரங்கேறின. அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் வலைத்தளத்தில் பலரும் பதிவுகள் பகிர்ந்து வந்தனர். பிக்பாஸில் இருந்து வெளியேறிய பிறகு குக் வித் கோமாளி, கலக்கப்போவது யார்? பிக்பாஸ் ஜோடிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.
சினிமாவிலும் பிசியாக நடித்து வரும் வனிதா விஜயகுமார் தற்போது பவர்ஸ்டார் சீனிவாசன் ஜோடியாக ~பிக்கப்| படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவர்களுடன் சேலம் ஆர்.ஆர்.பிரியாணி கடைகளின் உரிமையாளரான தமிழ்செல்வன், செந்தில், ரோஷன், ஜி.பி.முத்து, மீனாட்சி காயத்திரி, ஹர்சிதாதேவி, உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தில் பவர்ஸ்டாரை மூன்றாவதாக மணமுடித்து ஒரு பங்களாவுக்கு குடியேறும் வனிதா, அந்தபங்களாவில் பேய்களின் அட்டகாசம் இருப்பதை அறிந்த இருவரும் அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதை திரில், திகில், காமெடி கலந்து இந்தப்படம் உருவாகியுள்ளது.
இப்படம் குறித்து பவர்ஸ்டார் சீனிவாசன் கூறும்போது, ~இப்படம் எனக்கு நூறாவது படமாகும். என் திரையுலக அனுபவங்களை கொண்டு இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கத்துடன் செமத்தியான பாடல்களுக்கு ட்யூன் போட்டு இந்தப் படம் மூலம் இசையமைப்பாளராக அவதாரம் எடுக்கிறேன். இந்தப் படத்தோட டைட்டிலில் வனிதாவுக்கு “வைரல் ஸ்டார்” என்ற பட்டத்தோடு பெயரை போடுகிறோம்” என தெரிவித்துள்ளார்.