• Thu. Mar 27th, 2025

வடசேரி கலுங்கடி மூதாட்டி வேலம்மாள் மரணம்… மேயர் மகேஷ் நேரில் அஞ்சலி…,

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட தொடக்க நாளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த கொரோனா நிவாரண தொகையாக. ரூ.2 ஆயிரம் பெற்றுக்கொண்டார் மூதாட்டி வேலம்மாள்.

வடசேரி கலுங்கடியை சேர்ந்த மூதாட்டி வேலம்மாள் அரசின் உதவி தொகை ரூ.2 ஆயிரத்தை பெற்றுக்கொண்டதை ஒரு கையில் சீட்டு கட்டு போல் நான்கு ரூ.500 தாளை விரித்து வைத்துக்கொண்டு பொக்கை வாயால் புன்னகை பூத்த புகைப்படம் சிறப்பு பெற்றது மட்டும் அல்ல. தமிழக அரசின் விளம்பரத்தில் கூட இடம் பிடித்தது.

குமரி மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்று பயணத்தின் போது மூதாட்டி வேலம்மாளை நேரில் சந்தித்து பேசியதை குமரி மாவட்ட மக்கள் வியந்து பார்த்தனர்.

கடந்த (ஜூலை_27)ம் தேதி வேலம்மாள் பாட்டி முதுமை(92) காரணமாக மரணம் அடைந்தார். நாகர்கோவில் மாநகராட்சி மேயரும், குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான மகேஷ் மூதாட்டி வேலம்மாள் பூத உடலுக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.