குமரி மாவட்டத்தில் முன்னாள் படை வீரர் ஓய்வூதியம் தொடர்பான துறைகளுக்கு நிரந்தரமாக தீர்வு காணும் வகையில் மாவட்ட முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநரின் வேண்டுகோளுக்கு இணங்க ஸ்பார்ஷ் சேவை மையம் தொடங்க அனுமதிக்கப்பட்டது. இதன் விழா நேற்று (ஜூலை_28) மாலை நாகர்கோவில் கோட்டார் ரெயில்வே சாலையில் உள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலக வளாகத்தில் நடந்தது.
சென்னையை சேர்ந்த ராணுவ கணக்குகள் கட்டுப்பாட்டு அதிகாரி ஜெயசீலன் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் 4பங்கு குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை ரூ.28 ஆயிரத்து 614 -க்கான காசோலை வழங்கப்பட்டது.