

கன்னியாகுமரிக்கு சற்று தொலைவில் உள்ள மயிலாடி, காமராஜ் நகர் அருள்மிகு ஆலமரத்தம்மன் கோவில் கொடை விழாவில் இன்று சமபந்தி விருந்து நடைபெற்றது.
திரைப்பட தயாரிப்பாளர் மற்றும்”கலப்பை”அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவருமான பி.டி.செல்வகுமார் மற்றும் கலப்பை அமைப்பின் மாவட்டம் செயலாளர் வழக்கறிஞர் பத்மநாபன் ஆகியோர் பங்கேற்றனர்.

கொடைவிழாவை முன்னிட்டு நடைபெற்ற சமபந்தி விருந்தில் பக்தர்களுகு பி.டி.செல்வகுமார் உணவை பரிமாறி தொடங்கி வைத்தார். இந்த சமபந்தி விருந்தில் சாதி,மதம் வேறுபாடின்றி அருள் மிகு ஆலமரத்தம்மன் பக்தர்களாக மயிலாடி ஊரை சார்ந்தவர்கள் மட்டும் அல்லாது அக்கம்பக்கத்து கிராமங்களை சேர்ந்தவர்களும் இந்த சமபந்தி விருந்தில் பங்கேற்று அம்மனை வணங்கி சென்றார்கள்.

