எங்களுக்கு கிடைத்தது இதுதான் பொதுமக்கள் என காய்கறி, பழங்கள், கரும்புகளை பறித்துச் சென்றனர்.
தமிழக முதல்வர் இரண்டு நாள் பயணமாக சிவகங்கை மாவட்டம் வருகை தந்தார். இன்று சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் முதல்வர் மு. க. ஸ்டாலின் கலந்து கொண்டு பல கோடி மதிப்பில் முடிவற்ற பணிகளை தொடங்கி வைத்து புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் முதல்வர் வருகைக்காக மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி வாயிலில் காய்கறிகள், பழங்கள், மலர்கள் கொண்டு அலங்காரம் செய்து வரவேற்பு வளைவு வைத்திருந்தனர்.
அழகாக காட்சி அளித்தது நிகழ்ச்சி முடிந்து முதல்வர் சென்ற மறுநிமிடமே காத்திருந்த கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் அழகுபடுத்தி வைக்கப்பட்டிருந்த வளைவில் இருந்த பழங்கள், காய்கறிகள், மலர்களை சூறையாடத் தொடங்கினர். தயாராக கொண்டு வந்திருந்த கத்திகள் மூலம் காய்கறிகள், பழங்களை, வெட்டி எடுத்து துண்டு, சாக்கு ,பைகளில் வைத்து கட்டி தலைகளில் தூக்கிச் சென்றனர்.
மேலும் எட்டாத உயரத்தில் இருந்த காய்கறி, பழங்களை வளைவில் ஏறி நின்று பறித்துச் சென்றனர். காய்கறி, பழங்களை எடுத்துச் சென்ற ஒவ்வொரு முகத்திலும் புன்னகை, புண் சிரிப்பு சந்தோசத்துடன் பழங்கள் காய்கறிகளை வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.