புதுச்சேரியில் புதிய பிஜேபி மாநில தலைவராக வி.பி. ராமலிங்கம் நேற்று ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருடைய பதவியேற்பு விழா இன்று மரப்பாலம் சந்திப்பில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

விழாவில் பிஜேபி அகில இந்திய பொதுச் செயலாளர் தருண் சுக் புதுச்சேரி மாநில மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் பிஜேபி உன்னால் தலைவர் செல்வ கணபதி, மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.
பதவி ஏற்பு விழாவில்.. புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவராக ராமலிங்கம் பதவி ஏற்றார், தொடர்ந்து தலைவருக்கான கடிதத்தை பாஜக அகில இந்திய பொதுச்செயலாளர் தருண்சுக் வழங்கினார். மேலும் புதிதாக பதவியேற்றுக் கொண்ட ராமலிங்கத்திற்கு பிஜேபி நிர்வாகிகள் சால்வைகள் அணிவித்தும் பூங்கொத்துக்கள் கொடுத்தும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பதவியேற்பு விழாவில் பேசிய மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா…
வரும் சட்டமன்ற தேர்தலில் 12 அல்லது 15 இடங்களில் போட்டியிட்டு 100 சதவிதம் தேர்ச்சி பெற வேண்டும்,அதற்கு ஏற்ற தலைவரை நியமித்துள்ளோம் என்று குறிப்பிட்ட அவர், கடந்த காலங்களில் புதுச்சேரியில் பாஜக எங்கே இருக்கிறது என்று தேடிய காலம் போய் தற்போது காங்கிரஸ் கட்சி எங்கே இருக்கிறது என்று தேடும் காலம் வந்திருக்கிறது மீண்டும் வருகின்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைக்கும் என்றார்.







; ?>)
; ?>)
; ?>)