மதுபானங்களை குடிப்பதை தவிர்த்துவிட்டு இனி கஞ்சாவை பயன்படுத்தவேண்டும் பாஜக எம்எல்ஏ வின் சர்ச்சை பேச்சால் பரபரப்பு
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பாஜக சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது. ஏராளமானோர் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் பாஜக எம்எல்ஏ கிருஷ்ணமூர்த்தி பந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது, காங்கிரஸ் ஆட்சியில் சத்தீஸ்கர் மாநிலம் முழுவதும் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டுக் கிடக்கிறது. எங்குப் பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்புணர்வு, வன்முறை போன்ற குற்றங்கள் பெருகி வருகின்றன.
பொதுமக்கள் மதுபானங்களை குடிப்பதே இது போன்ற குற்றங்கள் நடைபெறுவதற்குக் காரணம். மதுபானங்கள் குற்றங்களை செய்ய மனிதர்களைத் தூண்டுகிறது. சத்தீஸ்கரில் மதுபானங்களை ஒழித்துவிட்டு கஞ்சா, பாங்கு பயன்படுத்துவதை அரசு ஊக்குவிக்க வேண்டும். போதை தேவைப்படும் நபர்களுக்குக் கஞ்சாவை அரசு விநியோகம் செய்ய வேண்டும். மது ஒழிப்பு நடவடிக்கைக்காக மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழு, கஞ்சாவை விற்பனை செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்த வேண்டும், என அறிவுரை கூறினார். பாஜக எம்எல்ஏவின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.