• Wed. Apr 24th, 2024

நீதிமன்ற உத்தரவை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்

Byகுமார்

Jul 26, 2022

கட்டாய இலவச கல்வி திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் பள்ளியில் இருந்து 6கிலோமீட்டர் தூரத்தில் இருந்து வசித்தாலும் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என .- உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த கோபால் மற்றும் சரவணன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்
மனுவில் தங்களது குழந்தைகளுக்கு மதுரை மகாத்மா மெட்ரிகுலேஷன் பள்ளியில் மத்திய அரசின் கட்டாய இலவச கல்வி திட்டத்தின் RTE அடிப்படையில் பள்ளியில் இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.இதனை விசாரணை செய்த நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில் “All animals are equal but some animals are more equal than others” – George Orwell in “Animal Farm”.என்ற வாசகத்துடன் உத்தரவு பிறப்பித்துள்ளார் மேலும் மனுதாரர்கள் இருவரும் தங்களது குழந்தைகளுக்கு மத்திய அரசின் கட்டாய இலவச கல்வி திட்டத்தில் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளனர் ஆனால் மனுதாரர்கள் ஒரு கிலோ மீட்டருக்கு உள்ளே வசிக்கவில்லை என்ற காரணத்தை கூறி பள்ளி நிர்வாகம் மனுவை நிராகரிக்கப்பட்டுள்ளது.
மகாத்மா மெட்ரிக் பள்ளி சிறுபான்மையினர் பள்ளியும் கிடையாது எனவே இவர்கள் இந்த சட்டத்திலிருந்து தப்பிக்கவும் முடியாது.மத்திய அரசின் கட்டாய கல்வி திட்டத்தில் உச்ச நீதிமன்றம் தெளிவான உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது .ஒரு பள்ளியில் கட்டாய கல்வி திட்டத்தின் அடிப்படையில் பள்ளி ஒரு கிலோமீட்டருக்குள் போதிய விண்ணப்பம் வரவில்லை என்றால் மூன்று கிலோமீட்டர் தூர விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்றும் மூன்று கிலோ மீட்டருக்குள்ளும் போதிய மாணவர்கள் விண்ணப்பிக்க வில்லை என்றால் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் இருந்து விண்ணப்பிக்கும் மனுதாரர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என கூறியுள்ளது .எனவே நீதிமன்றம் வகுத்துள்ள இந்த விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே பின்தங்கிய குழந்தைகளின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும்.எனவே இதனை கருத்தில் கொண்டு மகாத்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மத்திய அரசின் கட்டாய இலவச கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்கள் சேர்க்கை நடத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *