• Fri. Aug 21st, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு 108 அவசரகால ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பாக அவசர ஆலோசனை..,

ByKalamegam Viswanathan

Aug 21, 2026

மதுரை ரயில் நிலைய மேற்கு நுழைவாயில் தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கம் கண்டன கூட்டம் மற்றும் அக்டோபர் மாத வேலை நிறுத்த ஆயத்த கூட்டம் நடைபெற்றது.

தலைமை:- M. செந்தில்குமார்
மாவட்ட பொருளாளர்

முன்னிலை:-
P. உதயகுமார்
மாவட்ட துணைச் செயலாளர்
விருமாண்டி
மாவட்டத் துணைச் செயலாளர்
கார்த்திக் குமார்
மாவட்டத் துணை தலைவர்

20.8.2026 சட்டபேரவை கூட்ட தொடரில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அவர்கள் 108 ஊழியர்களின் ஊதியம் 55000 என பேசிய பேச்சை தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்… இக் கூட்டத்தில் அக்டோபர் மாத வேலை நிறுத்தத்திற்கான ஆலோசனை கூட்டம் மற்றும் தொழிலாளர் தீர்ப்பாயத்தின் 8 மணி நேர பணி உத்தரவு மற்றும் 2023 மற்றும் 2024 ஆண்டிற்கான 25% ஊதிய உயர்வு 8.33 % தீபாவளி போனஸ் உடனே அமுல்படுத்த வேண்டும் ஆகியவை உட்பட 9 அம்ச கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றபட்டது.

சிறப்புரை:-
M. இருளாண்டி
மாநில பொதுச் செயலாளர்
நன்றி உரை:-
P. உதயகுமார்
மாநில துணை பொதுச் செயலாளர்