• Thu. Apr 25th, 2024

எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க மதுரை விமான நிலையத்தில் அனுமதியின்றி மேடை..

ByA.Tamilselvan

Sep 29, 2022

எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க மதுரை விமான நிலையத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட திடீர் மேடையால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்த முன்னாள் முதல்வரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு , ஆர் பி உதயகுமார், எம் எல் ஏ ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமையிலான அதிமுகவினர் மாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அப்போது விமான விமான நிலைய பயணிகள் வருகை வாயிலில் முன்பு அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க ராஜன் செல்லப்பா எம்எல்ஏ ,செல்லூர் ராஜு ,உதயகுமார் ஆகியோர் திடீர் மேடை அமைத்து தொண்டர்களுடன் வரவேற்பு அளித்தனர்.

அதிமுகவினர் விமான நிலையத்தில் முன் அனுமதி பெறாமல் மேடை அமைக்கப்பட்டது பெரும் சர்ச்சை எழுப்பியுள்ளது. மதுரை விமான நிலையத்தில் வரும் முக்கிய பிரமுகர்களை வரவேற்க அந்தந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் நேரடியாக நின்று வரவேற்று அனுப்பி விடுவது வழக்கம். ஆனால் முதல் முறையாக அதிமுகவினர் மதுரை விமான நிலையத்தில் சர்ச்சைக்குரிய வகையில் திடீர் மேடை அமைத்து வரவேற்பளித்தனர். எடப்பாடி பழனிச்சாமி வருவதற்காக குறைந்த அளவு போலீசார் பாதுகாப்பில் அமர்த்தபட்டன, ஆனால்
மதுரை விமான நிலைய அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் மேடை அமைத்து நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றதால் அதிகளவு அதிமுக தொண்டர்கள் கூடினர், இதனால் காவல்துறையினர் கட்டுப்படுத்த முடியாமல் திக்கு முக்காடினர். ஒரே நேரத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் விமானத்தில் வரும் சூழ்நிலையில் இது போன்ற அரசியல் கட்சிகள் மேடை அமைத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வழி வகுக்கும். இதுகுறித்து அவனியாபுரம் காவல் ஆய்வாளரிடம் கேட்டபோது மதுரை விமான நிலையத்தில் இருந்து புகார் வரும் பட்சத்தில் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *