• Thu. Jun 11th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

உக்ரைன் பிரச்சினை – ரஷ்யா அமெரிக்க அதிபர்கள் இன்று பேச்சு வார்த்தை

Byமதி

Dec 7, 2021

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருந்த உக்ரைன் 1991ஆம் ஆண்டு விடுதலை பெற்று தனி நாடாக மாறியது. இதையடுத்து, நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் உக்ரைனை சேர்க்க அமெரிக்கா முயற்சித்தது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதற்கிடையே, உக்ரைன் மீது படை எடுக்க 1.75 லட்சம் ராணுவ வீரர்களை எல்லைப்பகுதியில் ரஷ்யா நிலைநிறுத்தி உள்ளதாகவும், அதற்கான ஆதாரம் இருப்பதாக அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் கூறினார். ரஷ்யாவின் செயலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்தார். ஆனால், இதை மறுத்தது ரஷ்யா, உக்ரைன்தான் தன் சொந்த படைபலத்தைப் பெருக்கி வருவதாக குற்றம் சாட்டியது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் இன்று காணொலி காட்சி வழியாக சந்திக்க உள்ளனர். அப்போது, உக்ரைன் பிரச்சினை குறித்து விவாதம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.