• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு அறுசுவை உணவு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் எம்எல்ஏ ஏற்பாட்டில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன், ஒன்றிய செயலாளர் ராஜாமணி முன்னிலையில் மாடக்கோட்டை புனித அன்னாள் கருணாலயா மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு காலை உணவை முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினருமான தமிழரசி ரவிக்குமார் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கண்ணங்குடி கூட்டுறவு சங்க தலைவர் சுப.தமிழரசன், விவசாய அணி காளிமுத்து, மாணவரணி ராஜபாண்டி கோபி, ஒன்றிய நிர்வாகிகள் முர்த்தி இலக்கிய அணி சுப்பிரமணியன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.