• Wed. Mar 25th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம்..!!

ByA.Tamilselvan

Nov 23, 2022

மீண்டும் திமுக இளைஞக் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பல ஆண்டுகளாக திமுக இளைஞரணி செயலாளராக இருந்துவந்த மு.க.ஸ்டாலின், கட்சியின் செயல் தலைவரான பிறகு அந்தப் பதவியை துறந்தார். இதையடுத்து முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் நியமிக்கப்பட்டார்.நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தின்போது, உதயநிதி ஸ்டாலினும் மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டார். அவரது பிரசாரம் வெகுவாக கவனிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கட்சியில் குறிப்பிடத்தக்க பதவி வழங்கப்படும் என்ற பேச்சுகள் அடிபட ஆரம்பித்தன.உதயநிதி ஸ்டாலினை இளைஞரணி செயலாளராக கடந்த 2019 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இந்நிலையில், திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இளைஞரணி துணை செயலாளர்களாக பிரகாஷ், பிரபு, சீனிவாசன், பிரதீப் ராஜா, ஆனந்தகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் திமுக மகளிர் அணி செயலாளர் ஆக இருந்த கனிமொழி துணை பொதுச் செயலாளர் ஆகியுள்ள நிலையில் மகளிர் அணிக்கு புதிய செயலாளராக ஹெலன் டேவிட்சன் நியமிக்கப்பட்டுள்ளார். திமுக மகளிர் அணி தலைவராக விஜயா தாயன்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி தலைமை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.