திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மங்களம் பகுதியில் முதியவர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் எதிரே வரும் வாகனங்கள் செல்லும் தவறான வழியில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த முதியவரின் எதிரே வேன் ஒன்று வந்துள்ளது. தொடர்ந்து அந்த முதியவர் வேன் வருவதை கூட கவனிக்காமல் தனது இரு சக்கர வாகனத்தை தவறான திசையிலேயே இயக்கியுள்ளார். இதனை சுதாரித்துக் கொண்ட வேன் ஓட்டுநர் கிரேக் பிடித்து நிறுத்தியுள்ளார். ஆனால் எதிரே வந்த முதியவர் வேனின் மீது மோதி கீழே விழுந்தார். தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனிடையே இந்த விபத்து குறித்து சிசிடிவி காட்சிகள் வைரலாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.








