• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல்-5 போர் படுகாயம்

பொள்ளாச்சியில் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல்,5 பேர் படுகாயம். பொள்ளாச்சி வால்பாறை சாலையில் தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிகளவில் செல்கின்றது. சாலையில் குறுக்கே தடுப்பு சுவர் உள்ளதால் அருகில் வசிக்கும் பொதுமக்கள் வால்பாறை சாலை வருவதற்கு குறுக்குசாலை பயன்படுத்தி வருகின்றனர்.

இதையடுத்து பொள்ளாச்சிலியிருந்து 2 பேர் சென்ற இருசக்கர வாகனமும் எதிர்ப்புறம் வந்த இரு சக்கர வாகனத்தில் மூவரும் வந்த பொழுது இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதியது.இந்த விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

பொதுமக்கள் 108க்கு தகவல் தெரிவித்ததன் பேரில் 5 பேரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு ஒருவர் மட்டும் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை செய்துவருகின்றனர். cctv கண்காணிப்பு கேமரா வில் பதிவாகி காட்சிகள் பதற வைக்கிறது என போலீசார் தெரிவித்தனர்.