விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள நடுவப்பட்டி கெங்கையம்மன் கோவிலுக்கு திருமணத்திற்காக சிவலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் தனது உறவினர்களுடன் கடந்த 31ஆம் தேதி வந்துள்ளார். திருமணத்திற்கு வந்த உறவினர்களில் தும்பக்குளம் ரவிக்குமார் வயது 47 மற்றும் நல்லம்மாள் புரம் சுரேஷ்குமார் வயது 45 இருவரும் அதிகாலையில் கோவிலுக்கு பின்புறம் உள்ள ஆற்றுப் பகுதிக்கு சென்றதாக தெரிய வருகிறது. சென்றவர்கள் மாலை வரை திரும்பி வராததால் அருகில் உள்ள அப்பைநாயக்கன்பட்டி காவல் நிலையத்தில் காணாமல் போனவர்கள் குறித்து புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆறு நாட்களாக உறவினர்கள் மற்றும் காவல் துறையினர் தேடி வந்த நிலையில் இன்று அப்பகுதி ஆடு மேய்ப்பவர்கள் துர்நாற்றம் அடிப்பதாக கூறிய தகவலை அடுத்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது உரை கிணற்றில் துர்நாற்றம் வீசியதால் அப்பகுதியில் ஜேசிபி உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இறுதியாக கிணற்றிலிருந்து இருவரின் உடல்களையும் அழுகிய நிலையில் தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு புரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் வேப்பிலை பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிங்கம் என்பவர் மனைவி தெய்வானையின் தோட்டத்தில் மக்காச்சோள பயிறு காக பாதுகாப்பிற்கு மின்வெளி அமைத்துள்ளதாக தெரிய வருகிறது. இந்த மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து இருவரும் உயிரிழந்ததால் தோட்டத்திலே பராமரிப்பு செய்த தெய்வானையின் மகள்களின் கணவர்களான சுதாகர் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் சேர்ந்து மின்சாரம் தாக்கி பலியான சுரேஷ்குமார் மற்றும் ரவிக்குமார் இருவரின் உடல்களை அப்புறப்படுத்தும் முயற்சி ஈடுபட்டு உடல்களை உரை கிணற்றில் தூக்கி வீசியதாக தெரியவருகிறது.

இதன் அடிப்படையில் அப்பயநாயக்கன்பட்டி போலீசார் மணிகண்டன் மற்றும் சுதாகர் ஆகிய இருவரை விசாரணை செய்து வருகின்றனர். தோட்டத்திற்கு மின்சார வேலி அமைத்து விவசாயம் செய்யும் நிலையில் இது போன்ற உயிரிழப்புகள் தொடர்ந்து வருவதால் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.











; ?>)
; ?>)
; ?>)