


மயக்க மருந்து கலந்த இனிப்புகள் கொடுத்து பேருந்தில் பயணிக்கும் மூதாட்டிகளிடம் நகைகள் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜானகி, வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர் கிரிஜா இவர்கள் இருவரும் வேலூரில் இருந்து அரசு பேருந்தில் தனியாக பயணம் செய்தனர்.
அப்போது, பேருந்தில் பயணித்த ஒரு ஆண், ஒரு பெண் ஆகியோர் மயக்க மருந்து கலந்த இனிப்புகள் கொடுத்து 8 சவரன் நகைகளை திருடிச் சென்ற தாக தாம்பரம் காவல் நிலை யத்தில் புகார் அளித்தனர்.


இதேபோல், நசீமா என்பவர் கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரம் நோக்கி வந்தபேருந் தில் பயணித்தபோது 13 சவ ரன் நகைகள் மாயமானதாக புகார் அளித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தாம்பரம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் விசாரித்தனர். பழைய குற்றவாளிகளின் புகைப்படங்களில் இருந்து நகை திருட்டில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காட்டினர். இதுதொடர்பாக, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மங்கலம், காளப்பநாயக்கன் பட்டியைச் சேர்ந்த ராணி (54) மற்றும் அவரது ஆண் நண்பர் பரமேஸ்வரன் (52) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
இவர்கள், பேருந்துகளில் பயணம் செய்யும் வயதான பெண்களிடம் கோயில் பிரசாதம் என்று கூறி மயக்க மருந்து கலந்த இனிப்புகளை கொடுத்து நகைகளை திருடியது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு 10 சவரன் தங்க நகைகள் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு நீதிபதி முன் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

