• Fri. Aug 21st, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

பல்வேறு ஆலயங்களில் தவெக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சிறப்பு வழிபாடு..,

ByS. SRIDHAR

Jun 22, 2026

தமிழக முதல்வர் ஜோசப்விஜய்யின் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள பல்வேறு ஆலயங்களில் தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இன்று காலை முதல் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாநகரப் பகுதியான திருக்கோகர்ணம் கோவில்பட்டி ஸ்ரீ திரிசூலம் பிடாரி அம்மன் ஆலயத்தில் தவெக தொண்டர்கள் சிறப்பு வழிபாடு செய்த போது தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ பால் அபிஷேகம் பன்னீர் அபிஷேகம் என ஏழு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பஞ்சமுக தீபாதாரணை காண்பிக்கப்பட்டது.

தவெக ஐந்தாவது வார்டு வட்டக் கழக செயலாளர் ஆனந்தகுமார் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நகரப் பொருளாளர் R.அப்துல்ஷரீஃப் மற்றும் நிர்வாகிகளான ரவி அப்தாகிர் ஆதித்யராஜன் என அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.