விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளில் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் புகழ். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அங்கிருந்த கோமாளிகளுடன் அடித்த லூட்டிகள் மூலம் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகிவிட்டது என்றே கூறலாம்.
பென்ஸியா என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக புகழ் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் பல பேட்டிகளில் தெரிவித்தும் இருந்தார். குறிப்பாக சமீபத்தில் கடற்கரையில் போட்டோஷுட் நடத்தி விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் கூட அறிவித்தனர். இந்த நிலையில், இன்று திண்டிவனத்தை அடுத்த தீவனூர் பொய்யாமொழி விநாயகர் கோவிலில் இந்து முறைப்படி, நடிகர் புகழ் மற்றும் பென்ஸியா ஆகியோருக்கு மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களின் திருமணத்திற்கு நடிக்கரும் இயக்குனருமான சசிகுமார் வருகை தந்துள்ளார். மேலும் இவர்களின் திருமணம் தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து புகழுக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.







; ?>)
; ?>)
; ?>)