• Fri. Dec 13th, 2024

ஆகஸ்டு மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.43 லட்சம் கோடி!

ByA.Tamilselvan

Sep 1, 2022

ஆகஸ்ட்மாத ஜிஎஸ்டி வசூல் கடந்த ஆண்டை விட 28 சதவீதிம் அதிகமாக வசூலாகியுள்ளது. நடப்பாண்டு மே மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.41 லட்சம் கோடியாகவும். ஜூன் மாதத்தில் ரூ.1.44 லட்சம் கோடியாகவும், ஜூலை மாதத்தில் ரூ.1.49 லட்சம் கோடியாகவும் இருந்தது. இந்தநிலையில் ஆகஸ்டு மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.43 லட்சம் கோடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வசூலான தொகையை விட 28 சதவீதம் அதிகமாகும்.