• Wed. Jun 26th, 2024

கலவிச் சாலையான கல்விச்சாலை… மௌனம் காக்கும் தமிழ்நாடு அரசு!

கலவிச் சாலையான கல்விச்சாலை… மௌனம் காக்கும் தமிழ்நாடு அரசு!

Followup -1

மாதா,பிதா,குரு,தெய்வம் என்பது முதுமொழி. பெற்ற தாய், தந்தையருக்கு அடுத்த இடத்தில் குரு அதாவது தனக்கு கல்வி போதிக்கும் ஆசிரியருக்கு மரியாதை தரவேண்டும் என்று கால காலமாக சொல்லப்படுகிறது. தாய், தந்தைக்கு அடுத்த இடத்தில் வைத்துப் பார்க்கப்படும் ஆசிரியை ஒருவர், அதாவது நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியை ஒருவர் செய்த செயலால் தூத்துக்குடி மாவட்டமே துடிதுடித்துக் கிடக்கிறது.

கொரோனா காலத்திற்குப் பிறகு கல்வி கற்பதற்கு செல்போன் என்ற சாதனம் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிப்போனது. ஆரம்பக் கல்வியில் தொடங்கி கல்லூரி கல்வி வரை பாடத்திட்டங்கள் செல்போன் மூலம் மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டது. அப்படிப்பட்ட செல்போனில் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியை ஒருவர் ஆபாச வீடியோக்களை அனுப்புவது, ஆபாச சாட் செய்வது என்ற நிலைக்கு மாறியுள்ளதன் பின்னணியில் உள்ள கலாச்சாரச் சீர்கேடு ஒருபுறம் என்றாலும், ஒழுக்கம் கற்பிக்க வேண்டிய ஆசிரியை ஒருவரே ஒழுக்கக்கேடாக மாணவர்களை திசைமாற்றும் வேலையில் ஈடுபட்டதுதான் தூத்துக்குடி மாவட்டம் தற்போது பேசப்படும் செய்தியாக உள்ளது.

பள்ளிச் செயலாளர் க.ராஜன்

தூத்துக்குடி மாவட்டம் சிறுநாடார் குடியிருப்பு பகுதியில் ரா.ம.வீ நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருபவர் பர்வதாதேவி. இவர் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்குப் பாடம் எடுக்கிறார். கல்வி சொல்லித் தரவேண்டிய இந்த ஆசிரியை கலவியை மாணவர்களுக்குக் கற்றுத் தந்த வீடியோ பரவியதைக் கண்டு அப்பள்ளியின் செயலாளர் க.ராஜன் அதிர்ச்சியடைந்தார். தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற பர்வதா தேவியின் செயலால் அதிர்ச்சியடைந்த அவர் பள்ளி திறந்த 10.6.2024 அன்று தலைமை ஆசிரியை பர்வதாதேவியை பள்ளிக்குள் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து செய்திகள் வெளியானதால், தூத்துக்குடி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், பள்ளியின் செயலாளர் ராஜனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு அவருக்கு மட்டுமின்றி தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோருக்குப் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

June 3- ராஜன், தமிழக அரசுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பர்வதா தேவி மீது நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பப்பட்ட மனு ….

ஆனால், இதற்கு முன்பே 3.6.2024 அன்று சென்னையில் உள்ள தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு ரா.ம.வீ நடுநிலைப் பள்ளியின் செயலாளர் ராஜன் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், எமது பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணிபுரியும் பர்வதாதேவி அவர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை நடவடிக்கை எடுக்க பள்ளி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. காரணம், பர்வதாதேவியின் ஆபாச வீடியோ ஒன்றும், செய்தி ஒன்றும் வலைதளங்களில் பரவி வருகிறது. இதைப்பற்றி அவரிடம் கேட்ட போது, அந்த ஆபாச செய்தியை பரப்பியதில் பள்ளிச் செயலாளரான எனக்கு பங்கு உண்டு என்று வாய்மொழியாக சொல்லிவிட்டார்.

ஆகையால், பள்ளிச் செயலாளராகிய நான் அவரிடம் விளக்கம் கேட்டு கடிதம்(22.3.2024 கொடுத்தேன். அதற்கு பர்வதாதேவி கொடுத்த (4.4.2024) விளக்கம் நிர்வாகம் ஏற்கும் விதமாக இல்லை. வலைதளங்களில் வந்த செய்தியைப் பற்றி விசாரித்ததில், பர்வதாதேவி பள்ளியில் பயின்ற பல பழைய மாணவர்களிடம் ஆபாசமாக பேசி வருவதாக தகவல் கிடைத்தது. இதில் ஒரு பழைய மாணவனிடம் பெற்ற ஆபாசமான படங்கள் மற்றும் வாட்ஸ் அப் சாட்டிங் எல்லாம் கிடைத்தன.
ஆகையால் 10.4.2024 அன்று பர்வதாதேவி மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்து அன்று அவருக்குப் பதிவு தபால் அனுப்பப்பட்டது. பள்ளியின் பழைய மாணவர்கள் பலரிடம் பாலியல் ரீதியாகவும், வலைதளங்களில் ஆபாசமாக சாட்டிங் வரும் ஆசிரியை எப்படி ஒரு ஆசிரியராக பணி செய்ய அனுமதிக்க முடியும்? இது ஒரு சமுதாய சீரழிவு. பள்ளி மாணவர்களின் எதிர்காலம் அல்லவா? ஆகையால் பள்ளி தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க முடிவெடுத்துள்ளது என்பதை இக்கடிதம் மூலம் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ராஜனுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் ……

ஆசிரியை தொழிலின் புனிதத்தைக் கெடுத்த தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதிய பள்ளியின் செயலாளருக்கு வட்டார கல்வி அலுவலகம் ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது தங்களது செயலாளர் பதவியை ஏன் ரத்து செய்யக்கூடாது என்ற அந்த நோட்டீஸில் கேள்வியும் எழுப்பியுள்ளது பிரச்சினையின் வீரியத்தை திசைதிருப்புவது போல் உள்ளது என்று கல்வியாளர்கள் கவலைப்படுகின்றனர். மேலும், இவ்வளவு பிரச்சினைகளுக்கும் மத்தியில் தலைமை ஆசிரியையைக் காக்கும் நோக்கத்தில் தமிழக அரசு செயல்படுகிறதோ என்ற சந்தேகத்தையும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

பர்வதாதேவி

சிவசுப்பிரமணியன்

தனது கூட்டணி கட்சியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன் மனைவியான பர்வதாதேவியைப் பாதுகாக்க திமுக அரசு முயற்சி செய்கிறதோ என்ற அச்சத்தையும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு அரசு?

ரா.ம.வீ நடுநிலைப் பள்ளி (தூத்துக்குடி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *