டங்ஸ்டன் சுரங்க ஏல ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதை, மதுரை மாநகராட்சி துணை மேயர் தலைமையில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி வல்லாளபட்டி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சுமார் 5,000 ஏக்கர் நிலப்பரப்பில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு கடந்த நவம்பர் மாதம் வேதாந்தாவின் கிளை நிறுவனத்திற்கு ஒப்புதல் வழங்கியது.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்திய நிலையில், இன்று சுரங்க ஏல ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளதை அடுத்து அப்பகுதி பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மதுரை மாநகர் பகுதியான தமுக்கம் மைதானம் இதில் உள்ள தமிழன்னை சிலைக்கு இந்திய வாலிபர் சங்கம் சார்பாக மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் மாலை அணிவித்தார். தொடர்ந்து சிலை முன்பாக பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.