• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

லாரி ஒட்டுநர் தூக்கிட்டு தற்கொலை

ByP.Thangapandi

Jan 1, 2025

உசிலம்பட்டி அருகே வீட்டில் தனியாக இருந்த லாரி ஒட்டுநர் தூக்கிட்டு தற்கொலை. அழுகிய நிலையில் உடலை மீட்டு போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூரைச் சேர்ந்தவர் பாஸ்கரன், லாரி ஓட்டுரான இவரது மனைவி 15 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட மகன் திருமணம் முடிந்து தனியாகவும், மகள் அவரது பாட்டி வீட்டிலும் வசித்து வருகின்றனர்.

உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கீழப்புதூர் மலையாண்டி தியேட்டர் எதிர் தெருவில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வரும் பாஸ்கரன், லாரி ஓட்ட வெளியூர்களுக்கு சென்று விட்டு மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே அவர் தங்கியுள்ள வீட்டிற்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அவர் தங்கியுள்ள வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசுவதை கண்ட அக்கம் பக்கத்தினர், ஜன்னல் வழியாக வீட்டிற்குள் பார்த்த போது, பாஸ்கரன் அழுகிய நிலையில் பிணமாக தூக்கில் தொங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உறவினர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இந்த தகவலின் பேரில் உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் அழுகிய நிலையில் இறந்து கிடந்த பாஸ்கரன் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, இவர் இறந்து ஒரு வாரத்திற்கும் மேல் ஆகி இருக்கலாம் எனவும், என்ன காரணத்திற்காக தற்கொலை செய்துகொண்டார் என தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.