• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

த.வெ.க வேட்பாளர் சந்திர காண்டீபனுக்கு ஆந்திர மாநிலத்தில் கஞ்சா வழக்கு..,

Byஜெ.துரை

Apr 5, 2026

பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் காண்டியப்பன் (எ) சந்திரகாண்டீபன் கஞ்சா வழக்கில் கைதாகி சமீபத்தில் வெளிவந்ததாக பல ஊடகங்களில் செய்தி வெளிவந்தது.

இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த காண்டியப்பன் தான் கஞ்சா வழக்கில் கைது செய்யப்படவில்லை என்றும், இது திமுகவின் சதி என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தமிழக காவல்நிலையங்களில் 9 வழக்குகள் இருப்பதாகவும், அந்த வழக்குகளில் கஞ்சா வழக்கு ஏதும் குறிப்பிடப்படவில்லை என்றும் கட்சித் தலைமையிடம் தெரிவித்திருந்தார்.

இவர் தமிழக காவல்துறையில் உள்ள வழக்கு விபரங்களை சமர்பித்தாரே தவிர, இவர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டது ஆந்திர மாநிலத்தில், காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள சாமல்கோட் காவல்நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இது குறித்த தகவலை கட்சித் தலைமையிடம் தெரிவிக்காமல் மறைத்துவிட்டார் என்பதுதான் நிதர்சனமான உண்மை.