இந்தியா முழுவதும் கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்று முடிந்த நிலையில், நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கடந்த ஜூலை 14 ஆம் தேதி ஏ.கே. ராஜன் குழு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து, நீட் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வின்படி 165 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளை உடனடியாக தமிழ்நாடு அரசு தொடங்கலாம் என்றும், நீட் தேர்வை ரத்து செய்வதற்காக தனிச் சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெறலாம் என்றும், நீட் ரத்து சட்டம் இயற்றுவது மாணவர் சேர்க்கையில் மாணவ சமுதாயத்துக்கான சமூக நீதியை உறுதி செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ மாணவர் சேர்க்கையை பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடத்தவேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, பாரதிய ஜனதாக் கட்சி அல்லாத மற்ற கட்டசிகள் ஆளும் மாநிலங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நீட் தேர்வு ரத்து குறித்து கடிதம் ஒன்றையும் எழுதினார். மேலும், தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி எழுதிய கடிதத்தையும், ‘நீட்’ தேர்வு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அளித்த அறிக்கையையும் வழங்கினார்.
அதேபோல் தற்போது, நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக தமிழக முதல்வர் முக.ஸ்டாலினின் கடிதம் மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையை ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் திமுக எம்.பி. திருச்சி சிவா வழங்கினார்.
- வாக்குவாதத்தில் ஈடுபட்டதிமுக மாமன்ற உறுப்பினர்..,
- துரோக வரலாறு எனும் அமமுக போஸ்டர்..,
- போதையில் சென்ற இருவர் கார்கள் மீது மோதி சேதம்.,
- மெத்தாபேட்டமைன் கடத்திய 4 பேர் சிறையில் அடைப்பு !
- இடிந்து விழும் நிலையில் நீர்த்தேக்க தொட்டி..,
- 1.25 கோடி தங்கம் கொள்ளை வழக்கில் 2 பேர் கைது !!!
- போத்தீஸ் கடைகளில் வருமானவரித்துறை சோதனை.
- ஆணவ படுகொலை மையப்படுத்தி “ஒத்த உசுரு”..,
- உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்..,
- கடலுக்கு அடியில் இருக்கும் இன்டெர்நெட் கேபிள்கள் யாருக்குச் சொந்தம்