• Thu. Apr 25th, 2024

திருச்சி திரையரங்குகளுக்குரெட் ஜெயண்ட் மூவீஸ்நெருக்கடி புலம்பும் உரிமையாளர்கள்

Byதன பாலன்

Apr 25, 2023

பொன்னியின் செல்வன் – 2 திரைப்படம்ஏப்ரல் 28 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழ்நாட்டில் இப்படத்தை வெளியிடும் உரிமையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குடும்பத்தாருக்கு சொந்தமான ரெட் ஜெயண்ட் மூவீஸ் பெற்றுள்ளது.தமிழகத்தில் உள்ள 90% தியேட்டர்களில் பொன்னியின் செல்வன் – 2 படத்தை திரையிடும் வகையில் திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகின்றன.தமிழ்நாட்டில் கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி, வட ஆற்காடு, தென்னாற்காடு விநியோக பகுதிகளில் உள்ள திரையரங்குகள் குறிப்பிட்ட சிலரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் புதிய
படங்களை திரையிட மொத்தமாக ஒப்பந்தங்களை அவர்களே செய்து விடுகின்றனர்.
இதனால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு எந்த ரிஸ்க்கும் இல்லை என்பதுடன், புதிய திரைபடங்கள் தங்கள் தியேட்டரில் ரிலீசானால் போதும்.
என்று காலத்தை கடத்தி வருகின்றனர். இதில் இருந்து முற்றிலும் மாறுபட்ட பகுதியாக இருக்கிறது திருச்சி விநியோக பகுதி. இந்த பகுதியில் இருக்கும் திரையரங்குகள் குறிப்பிட்ட சிலரின் கட்டுப்பாட்டில் இல்லை. உரிமையாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. திருச்சி ஏரியாவில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் முகவராக வேலை பார்ப்பவர் தமிழ்நாடு முதல் அமைச்சர் தோரணையுடன் தங்களை மிரட்டுவதாக கூறுகின்றனர் திரையரங்கு உரிமையாளர்கள். தமிழ்நாடு முதல்வரும், அவரது மகன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் அரசு அதிகாரிகள், பொதுமக்களிடம் கனிவுடன் நடந்துகொள்ளுங்கள் என கூறி வருகின்றனர்.ஆனால் அவர்கள் குடும்ப நிறுவனத்தின் அதிகாரிகள் திரையரங்க உரிமையாளர்களிடம் மரியாதை குறைவாக பேசுவதுடன், நான் சொல்வதை செய், கேள்வி கேட்காதே என அதிகார தொனியில் பேசுவது அவர்களுக்கு தெரியுமா என புலம்புகின்றனர். பொன்னியின் செல்வன் – 2 திரைப்படத்தை திரையிட ஒப்பந்தம் செய்ய இவர்கள் கேட்கும் முன் தொகையை கேட்டால் மயக்கம் வருகிறது என்கிறார் தஞ்சாவூர், கும்பகோணம் நகர்களில்தியேட்டர் நடத்தி வருபவர்கள். கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் தஞ்சாவூரில் உள்ளதியேட்டர்களில் திரையிட்டதன் மூலம்சுமார் 1 கோடி ரூபாய் பங்கு தொகையாக விநியோகஸ்தருக்கு கிடைத்தது. அதே தொகை அல்லது சற்று கூடுதலாக கேட்கலாம் ஆனால் பொன்னியின் செல்வன் – 2 படத்தை தஞ்சாவூரில் திரையிட2.50 கோடி ரூபாயை முன் தொகையாக கேட்கிறார்கள். அது மட்டும் இன்றி வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்களும் ஐந்து காட்சிகள் திரையிட வேண்டும். ஒருடிக்கட் 250 ரூபாய் என விற்பனை செய்ய வேண்டும் என்கின்றனர். அரசு அனுமதித்துள்ள அதிகபட்ச கட்டணம் 150 ரூபாய் அதற்குரிய GST, பஞ்சாயத்து வரி மட்டுமே கழிக்க வேண்டும். எஞ்சிய 100 ரூபாய்க்குவரி பிடித்தம் செய்யக்கூடாது என கட்டளையிடுகின்றனர். தியேட்டருக்கு உரிமையாளர் நானா இல்லை ரெட் ஜெயண்ட் மூவீஸ் அதிகாரிகளா என புரியவில்லை என புலம்புகின்றனர் திருச்சி ஏரியா திரையரங்கு உரிமையாளர்கள். இது சம்பந்தமாக பி.சி.சென்டர்களில் உள்ள தியேட்டர் உரிமையாளர்களிடம் கேட்ட போது தஞ்சாவூர் பரவாயில்ல, சி சென்டர்களில் இருக்கும் தியேட்டர்களில் படத்தை திரையிட குறைந்தபட்சம் 15 லட்ச ரூபாய் முன்பணம் இல்லை என்றால் படம் இல்லை என கூறுகின்றனர்என்றனர்.
திருச்சிஏரியாதிரைப்பட
விநியோகஸ்தர்களிடம் இது பற்றி விசாரித்த போது ஆளும்கட்சிக்கு சொந்தமான நிறுவனம் படத்தை வெளியிடுவதால் எதிர்த்து பேச முடியாமல் திரையரங்கு உரிமையாளர்கள் இருக்கின்றனர். அவர்களை எதிர்த்தால் தியேட்டர் தொழில் செய்ய முடியாமல் போய்விடும் என்கிற பயம். அதனால் கையறுநிலையில் தியேட்டர் உரிமையாளர்கள் இருப்பது உண்மைதான்.
இதனை வெளிப்படையாக சங்க தலைவர்கள், அல்லது விநியோகஸ்தர்கள்பேசினால் தொழில்ரீதியாக நெருக்கடி கொடுப்பார்கள் என்பதால் மெளனம் காக்கின்றனர். ஆட்சிமாறும்வரை வேறு தொழில் செய்யலாம் என பல விநியோகஸ்தர்கள் தொழிலைவிட்டுஒதுங்கிவிட்டனர். திரையரங்கு உரிமையாளர்கள் அப்படி ஒதுங்கவோ, தியேட்டரை மூடி வைக்கவோ முடியாது என்பதால் அத்துமீறல்களை சகித்து கொண்டு தொழில் செய்கின்றனர் என்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *