• Fri. Jul 18th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

ஆதித்தனாரின்44_வது நினைவு தினம் அஞ்சலி..,

தமிழக பத்திரிகை உலகின் ஜாம்பவான் என போற்றப்படும் சிபா.ஆதித்தனார், அன்றைய நெல்லை மாவட்டம் காயாம்பொழி என்னும் சிற்றூரில் பிறந்தவர்.பாரட்லா பட்டம் பெற்று மலோசியாவில் வழக்கறிஞராக இருந்தார்.

மலேசியாவில் இருந்து தாயகம் திரும்பிய சிபா ஆதித்தனாரின் கனவு ஒரு தினசரி பத்திரிகை தொடங்க வேண்டும் என்ற கனவில் இருந்தவர்.

அச்சகம் அமைக்க இடம் தேடிய போது. ‘விடுதலை’ என்னும் பத்திரிக்கையை நடத்தி வரும் தந்தை பெரியாரை அணுகி பத்திரிகைக்கான அச்சகம் அமைக்க இடம் தேடுவதாக சொன்னபோது,

தந்தை பெரியார் எக்மோர் பகுதியில் அவரது சொந்த இடமான பெரியார் திடலில் மனமுவந்து சிபா.ஆதித்தனரின் தினத்தந்தி பத்திரிகைக்கு அச்சகம் மற்றும் அலுவலகம் அமைக்க இடம் கொடுத்தது அன்று பலரால் பாராட்டப்பட்டது.

தினத்தந்தி எளிய தமிழில் (மக்களின் பேச்சு வழக்கில் வெளிவந்த பத்திரிகை)
ஏற்கனவே வெற்றிகரமாக வெளிவந்த பத்திரிகைகளுடன் சிறிய காலத்திலே போட்டி இட்டு வாசகர்களின் எண்ணத ஈர்த்தது. தினத்தந்தி பத்திரிகை. பத்திரிகையின் அடையாளமாக கலங்கரை விளக்கத்தை அமைத்தார்.

சிபா.ஆதித்தனார் மறைந்த 44_ஆண்டு நினைவு அஞ்சலி தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் உள்ள தினத்தந்தி அலுவலகங்களில் எல்லாம் இன்று 44_வது அஞ்சலி செலுத்தும் நிலையில்.

நாகர்கோவிலில் உள்ள தினத்தந்தி மற்றும் மாலைமலர் அலுவலகத்தில் இன்று சிபா.ஆதித்தனாரின் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திரு உருவ படத்திற்கு குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் தலைவர் நவீன் குமார், குமரி கிழக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டாக்டர் சிவகுமார், மாநில காங்கிரஸ் செயலாளர் சீனிவாசன், செல்வம் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.