

மதிமுகவின் சார்பில் பசும்பொன்னில் வைகோ, அவரது மகன் துரை வையாபுரி நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில், முத்துராமலிங்கதேவர் 116 வது ஜெயந்தி விழா மற்றும் 59 குருபூஜை விழாவிற்கு ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் M.A.குணா தலைமையில் வைகோ, தலைமை நிலைய செயலர் துரை வையாபுரி மற்றும் கட்சி நிர்வாகிகள் நேரில் வந்து மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
