• Fri. May 15th, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

கனமழை காரணமாக ரயில்கள் ரத்து

Byகாயத்ரி

Nov 24, 2021

விஜயவாடா ரயில்வே கோட்ட பகுதியில் பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக, சேலம் வழியாக இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, நேற்று மாலை 5 மணிக்கு புறப்பட வேண்டிய பெங்களூரு – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை புறப்பட வேண்டிய பிலாஸ்பூர் – எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில், தன்பாத் – ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை ரத்து செய்யப்பட்டது.

அதுபோல், இன்றிரவு 7.10 மணிக்கு புறப்பட்டு கரூர், நாமக்கல், சேலம் வழியாக செல்லும் நாகர்கோவில் – பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு வழியாக செல்லும் பாட்னா – எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று இரவு 8.10 மணிக்கு புறப்படும் நியூ டெல்லி – திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.