
சிற்றிச்சை மோகத்தால் நண்பர்கள் முகம் பார்க்க சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகனுக்கு நேர்ந்த கொடுமை… கத்தியால் சரமாரியாக குத்தி நகை பணம் செல் போன் பறித்த மூன்று வாலிபர்கள் கைது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் எல்லிஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் திருமலை ராஜன். இவர் நீலகிரி மாவட்டம் மசினகுடி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.இவரது மகன் பூபாலகிருஷ்ணன். அவிநாசிபாளையம் பகுதியில் கட்டட பொறியாளராக வேலை செய்து வருகிறார். பூபாலகிருஷ்ணனுக்கு கேய் ஆப் என்கிற சிற்றிச்சையாளர்களுடன் முகம் காணாத நண்பர்கள் சிலருடன் செல்போன் மூலம் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் அடிக்கடி சிற்றிச்சையாளர்கள் தங்களது செல்போனில் கேய் ஆப் மூலமாக கலந்துரையாடி வந்ததாகவும் கூறப்படுகிறது.



இந்த நிலையில் சிற்றிச்சை குழு உறுப்பினர்களான பல்லடம் அருகே மாதப்பூர் செந்தில் நகரை சேர்ந்த அன்புமணி 23, நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த சரண்ராஜ் 20, பல்லடம் பச்சாபாளையம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் 22 ஆகியோர் பூபாலகிருஷ்ணனை முகம் பார்க்க வேண்டி மாதப்பூரில் ஆள் நடமாட்டமற்ற காட்டுப் பகுதிக்கு வரவழைத்ததாக கூறப்படுகிறது. அதன் பேரில் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த பூபாலகிருஷ்ணனை காட்டுப்பகுதியில் பயன்பாடற்ற பாழடைந்த பங்களாவில் வைத்து அடித்து உதைத்து கத்தியால் சரமாரியாக குத்தியும் அவர் அணிந்திருந்த இரண்டரை சவரன் தங்க சங்கிலி, விலை உயர்ந்த செல்போன் மற்றும் அவர் வைத்திருந்த ஏடிஎம் கார்டை பிடுங்கி பாஸ்வேர்டை பெற்று 13 ஆயிரம் சொர்க்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு அவர்கள் மூவரும் தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து உடல் முழுக்க கத்தி குத்து காயங்களுடன் அங்கிருந்து தப்பி வந்த பூபால கிருஷ்ணனை அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடம் விரைந்து சென்ற பல்லடம் போலீசார் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்நிலையில் போலீசார் பூபாலகிருஷ்ணனிடம் துருவித் துருவி நடத்திய விசாரணையில் அவர் முதலில் தன்னிடம் லிப்ட் கேட்டு பைக்கில் ஏறிய நபர் ஒருவர் தன்னை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு ஏற்கனவே இருந்த இரண்டு நபர்களுடன் சேர்ந்து கொண்டு தன்னை கத்தியால் குத்தி அடித்து உதைத்து நகை,பணம், செல்போனை பறித்துக் கொண்டதாக கூறினார். பின்னர் ஒரு கட்டத்தில் போலீசார் தீவிர விசாரணைக்கு உட்படுத்தவே அதில் மேற்கண்ட உண்மைகள் வெளியானது. இதனை அடுத்து சிற்றிச்சை சேர்க்கையாளர்கள் வழிப்பறி கொள்ளையர்கள் ஆக மாறி மாதப்பூர் அருகே கொள்ளையடித்த பணம்,நகை, செல்போன் ஆகியவற்றுடன் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு விரைந்து சென்ற பல்லடம் போலீசார் அன்புமணி 23 சரண்ராஜ் 20 பிரபாகரன் 22 ஆகிய மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம், நகை, செல்போன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் பின்னர் போலீசார் சிறையில் அடைத்தனர் கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கேற்ப சிற்றிச்சை கூட்டாளிகளின் முகம் காண்பதற்காக சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகனை கத்தியால் குத்தி பணம் நகை பறிக்கப்பட்ட சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக அந்த வாலிபர் உயிர் தப்பிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
