சமூக வலைத்தளத்தில் கிடைத்த வானவில் தோழனை நம்பி சென்ற இளைஞருக்கு மயக்கமருந்து கொடுத்து தங்க மோதிரம், செல்போனை திருடிய நபர் கைது
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் குணசேகர் ( வயது 34) என்பவரிடம் சிவகாசி திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த முனீஸ்வரன் (வயது 32) என்பவர் சமூக வலைதளம் மூலம் அறிமுகம் ஆகி உள்ளார். தொடர்ந்து இருவரும் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து பேசி நட்பாக பழகி வந்துள்ளனர். அதன் பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்ள முடிவு செய்தவர்கள் சம்பவத்தன்று மதுரை ரெயில் நிலையம் வந்த அவர்கள் இருவரும், மதுரையில் இருந்து புனலூர் செல்லும் ரெயிலில் பயணித்தனர்.

அப்போது குணசேகருக்கு மயக்க மாத்திரைகளை கொடுத்து அவர் அணிந்திருந்த 2 பவுன் மோதிரத்தை முனீஸ்வரன் திருடி உள்ளார். அதுமட்டுமின்றி மயக்க நிலையில் இருந்த குணசேகரை, நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இறங்கி விட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்து விட்டார். இது குறித்து பாதிக்கப்பட்ட குணசேகர், ரெயில்வே போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து முனீஸ்வரனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கேசவன், தலைமை காவலர்கள் பொன் சவுந்திர பாண்டியன், ஜெயராஜ் ஆகியோர் திருத்தங்கல் பகுதியில் தலைமறைவாக இருந்த முனீஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.







; ?>)
; ?>)
; ?>)