தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பேருந்து நிலையத்திற்குள் அனைத்து பேருந்துகளும் வந்து செல்வதில்லை என பொதுமக்கள் மற்றும் வியாபாரி சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேரில் சென்று மனு கொடுத்தனர். இதன் அடிப்படையில் புகார்கள் வரப்பெற்றதைத் தொடர்ந்து இன்று மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி வட்டார போக்குவரத்து அலுவலர் இரா. கிரிஜா மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் பெலிக்ஸ் மாசிலாமணி ஆகியோர் சிறப்பு தணிக்கை மேற்கொண்டனர்.

இந்த தணிக்கை திருநெல்வேலி மதுரை நான்கு வழிச் சாலையில் தேவர்குளம் விளக்கில் நின்று சோதனை செய்யப்பட்டதில் செய்யப்பட்டது. அப்போது அனுமதி சீட்டின்படி கயத்தார் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்லாத ஆறு பேருந்துகளுக்கு சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துவதற்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது. இனிவரும் காலங்களில் கயத்தாறு பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வராத பட்சத்தில் மீண்டும் மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.இந்த சம்பவம் தொடர்து நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது!







; ?>)
; ?>)
; ?>)