• Mon. Aug 24th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை..,

தூத்துக்குடி மாவட்டத்தில் நவ.21 முதல் 24 வரை கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் முன்னேற்பாடுகள் பணிகளை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கும் ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார்.
 
வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் நவ.21 முதல் 24 வரை தினங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளைக் கண்காணித்து, மணல் மூடைகள், மரம் அறுக்கும் கருவிகள் போன்ற பொருள்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். 

நிவாரண முகாம்களைத் தயார் நிலையில் வைத்திடவும் தக்க முன்னேற்பாடுகள் செய்யவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேற்குறிப்பிட்ட நாட்களில் அனைத்து துறை அலுவலர்களும் பணியில் இருக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.