புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக சென்னை மெரினாவில் இன்று இரவு 8 மணிக்கு மேல் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் நடைபெறும் வகையில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் இன்றும், நாளையும் 19 ஆயிரம் போலீசாரும், 1,500 ஊர்காவல் படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 425 இடங்களில் போலீசார் வாகன சோதனை மேற்கொள்ள உள்ளனர்.
மேலும் மோட்டார் சைக்கிள் பந்தயத்தை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக 30 கண்காணிப்பு சோதனை குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. டிரோன்
கேமராக்கள் மூலமாகவும் போலீசார் கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளனர். பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்பட அனைத்து இடங்களிலும் பட்டாசுக்கள் வெடிப்பதற்கு போலீசார் தடை விதித்து உள்ளனர்.
புத்தாண்டை கொண்டாடுவதற்கு மெரினா காமராஜர் சாலையில் பொதுமக்கள் அதிகளவில் திரள்வார்கள் என்பதால் கடற்கரை உட்புற சாலை இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மூடப்படும். காமராஜர் சாலை போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரையில் இன்று இரவு 8 மணி முதல் நாளை
6 மணி வரையில் போக்குவரத்துக்கு தடை செய்யப்படும் என்றும் போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்
அதே போன்று பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையிலும் போக்குவரத்துக்கு தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் உள்ள அனைத்து மேம்பாலங்களும் இன்றிரவு 10 மணி முதல் 1-ம் தேதி அன்று 6 மணி வரை மூடப்படும் என்றும் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.