சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது.
சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள கவியரசு கண்ணதாசன் கலையரங்கத்தில் சாம்பவிகா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் உணவு திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் சுமார் 750 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளான சிறு தானிய உணவு வகைகளை செய்து கொண்டு வந்து காட்சிக்கு வைத்தனர்.
இவ்விழாவில் பள்ளிச் செயலர் ஏ.எம்.சேகர் கலந்து கொண்டு தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளைப் பற்றி மாணவர்களுக்கு எடுத்துக் கூறி, இவ்விழாவிற்கு சிறப்பு செய்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் தியாகராஜன் உடற்கல்வி ஆசிரியர் தடியப்பன், சரவணன் பொறுப்பாசிரியர்கள் சந்திரசேகர், மகரஜோதி, சக்திவேல், ஜெயமணி, சுதிசந்திரன் மற்றும் மழலையார் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை முத்து பஞ்சவர்ணம் பொறுப்பாசிரியர் பாண்டி செல்வி மற்றும் அனைத்து ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.