• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

குற்றாலத்தில் குவியும் சுற்றுலாவாசிகள்!

ஒமைக்ரான் பரவலைத் தடுக்க பண்டிகைக் காலங்களில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு உத்தரவிட்டது.

அதன்படி, புத்தாண்டு தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலாத் தலமான குற்றாலம் அருவிகளில் குளிக்க டிசம்பர் 31 முதல் ஜனவரி 2-ம் தேதி வரை 3 நாட்கள் தடை விதித்து தென்காசி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

இதனால், 3 நாட்களும் குற்றாலம் வெறிச்சோடி காணப்பட்டது. தடைக்காலம் முடிவடைந்ததையடுத்து, நேற்று காலையில் இருந்து குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஏராளமான சுற்றுலாப் பயணிகள், சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் அருவிகளில் மகிழ்ச்சியுடன் குளித்தனர். இதனால், குற்றாலம் மீண்டும் களைகட்டியது. அனைத்து அருவிகளிலும் குறைவான அளவில் தண்ணீர் விழுந்தது.