• Sat. Apr 27th, 2024

எங்கள காப்பாத்த சூப்பர் ஹீரோ இல்லையா . . அலறும் அமெரிக்கா

உலகத்தையே அமெரிக்காவை சேர்ந்த சூப்பர் ஹீரோக்கள் தான் காப்பாற்றி உள்ளனர். Bat man ,spider man ,super man,Ant man ,avengers போன்ற பல கற்பனை கதாபாத்திர சூப்பர் ஹீரோக்கள் அமெரிக்காவில் இருந்து கொண்டு உலகத்தையே காப்பாற்றியதாக அமெரிக்க மக்கள் பெருமை கூறுவர். ஆனால் தற்போது அந்த நிலை தலைகீழாக மாறி எங்களை காப்பாற்ற சூப்பர் ஹீரோ இல்லையா என்று அமெரிக்க மக்கள் அலறுகின்றனர்.

அமெரிக்காவில் ஒரே நாளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பலி எண்ணிக்கையும் 2,000ஐ நெருங்கியிருப்பதால் அந்நாட்டு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் உலக நாடுகள் சொல்லமுடியாத துயரில் சிக்கித்தவித்து வருகின்றன. கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாடு கடந்த ஆண்டு உலகின் பெரும்பாலான நாடுகளில் கடும் பாதிப்பையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது., தொடர்ந்து ஏற்படுத்தியும் வருகிறது. இதனிடையே கடந்த ஆண்டு நவம்பரில் தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ஓமைக்ரான் எனும் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா தொற்று உலக நாடுகளில் வீரியமாக பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


இதற்கு முன்பு கண்டறியப்பட்ட வைரஸ் வேரியண்ட்களை காட்டிலும் ஓமைக்ரான் மிக அதிக வேகத்தில் பரவி வருவதுடன், அது தடுப்பூசி திறனையும் கணிசமான அளவில் பாதிக்கும் என்பதும் கவலையை உண்டாக்கி இருக்கிறது.


உலக அளவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடாக திகழும் அமெரிக்காவில் சமீபத்திய வாரங்களில் குறிப்பாக கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின்னர் கொரோனா பாதிப்பு கடுமையாக அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாகவே லட்சங்களில் பதிவாகி வருகின்றன.


அந்த வகையில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் புதிதாக 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 1,012,899 பேருக்கு அங்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,909 பேர் அங்கு ஒரே நாளில் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.


48 லட்சம் மாதிரிகளில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அதில் 10 லட்சம் பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. அதே நேரத்தில் 1.04 லட்சம் பேர் அங்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சுமார் 20,000 பேர் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின் கொரோனாவால் நேற்று பாதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது வீட்டு தனிமையில் இருந்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *